குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை: தலைமைச் செயலாளர் ஆலோசனை

செய்திகள் / தமிழ்நாடு

Published: Friday, July 28 2023, 11:58:42

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை பல்கலை கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆகஸ்ட் 6-ம் தேதி குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை தரவுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனையில் டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை, விமான நிலைய உயரதிகாரிகள் பங்கேற்றனர்.