ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய்- பொதுமக்களை அதிர்ச்சி

செய்திகள் / தமிழ்நாடு

Published: Thursday, July 27 2023, 11:30:28

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் தக்காளி ஒரு கிலோ விலை 140 ரூபாய் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று தக்காளி ஒரு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் உயர்ந்து தக்காளி விற்பனைசெய்யப்படுகிறது. ஒரே நாளில் தக்காளியின் விலை உயர்ந்துள்ளதால். பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சில்லரை விற்பனையில் இன்னும் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, சில்லரை விற்பனை கடைகளில் 150 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 1,100 டன் தேவையுள்ள சூழலில், தற்போது 400 டன் மட்டுமே தக்காளி வரத்து உள்ளது.தக்காளி பற்றாக்குறையால் விலை அதிகரித்து காணப்படுகிறது என மொத்த விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இதேபோன்று, இஞ்சி ஒரு கிலோ விலை 250 ரூபாய்க்கும் பட்டாணி விலை ரூ.200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.