DMK FILES 2 வீடியே வெளியிட்டார் அண்ணாமலை

செய்திகள் / தமிழ்நாடு

Published: Thursday, July 27 2023, 11:28:36

திமுக ஃபைல்ஸ் 2 என்ற பெயரில் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரூ.5,600 கோடிக்கு திமுக ஊழல் செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழ்நாடு அரசு நிறுவனமான ETL நிறுவனம் 3 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளது. இந்த ETL டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒரு பங்கின் மதிப்பு ரூ.10 ரூபாய் வீதம் ஒரு லட்சம் பங்குகளுடன் ரூ.10 லட்சம் மதிப்பில் தொடங்கப்படுகிறது. இந்த ETL டெக்னாலஜி நிறுவனத்தில் தியாஜராஜ செட்டியர் எனும் ஒரு நபர் இயக்குன்ராக்கப்படுகிறார். அவருக்கு ஒரு பங்கு ஒதுக்கப்படுகிறது. அதன் மதிப்பு ரூ.10 மட்டுமே. ETL இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சர்வீசஸ் நிறுவனத்தில் ஒரே ஒரு பங்கு வைத்திருந்த உண்ணாமலை தியாகராஜன் தற்போது அந்த நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரரான சிங்கப்பூர் நிறுவனமான கிரேட்டர் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர். இதன்மூலம் ETL இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சர்வீசஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் தியாகராஜன், உண்ணாமலை தியாகராஜன் குடும்பத்தினருக்கு வந்துவிடுகிறது. போக்குவரத்துத்துறையில் சுமார் ரூ.2,000 கோடி முறைகேடு நடந்துள்ளது. போக்குவரத்து துறையில் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்க அனுமதிக்கப்பட்டதாகவும், வணிகப் பயன்பாடு வாகனங்கள் வாங்குவதில் துறைக்கு தொடர்போ முன் அனுபவமோ இல்லாத பல நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ.600 கோடிக்கு முறைகேடு செய்துள்ளது. ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் பெரும்பாலன வருமானம் ரொக்கமாக வாங்கப்பட்டு தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு ஹவாலா முறையில் விநியோக்கப்படுவதாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.