உலகமே இந்தியாவை நோக்கி பார்க்கிறது: பிரதமர் மோடி உரை

செய்திகள் / இந்தியா

Published: Thursday, July 27 2023, 11:08:59

உலக பொருளாதாரத்தில் 3வது இடம் பிடித்து மூன்றாவது முறையாக எனது ஆட்சி அமையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜி20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா உள்ளது. அதன்படி ஜி20 தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டை வரும் செப்டம்பர் மாதம் இந்தியா நடத்துகிறது. அதனையொட்டி டில்லி பிரகதி மைதானத்தில் ஜி20 உச்சி மாநாட்டிக்கிற்காக மறுவடிவமைக்கப்பட்ட இந்திய வர்த்தக மேம்பாட்டு அழைப்பு வளாகத்தில் பாரத் மண்டபம் என்ற பெயரில் புனரமைக்கப்பட்டுள்ள அரங்கை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதற்கான துவக்கவிழாவில் ஏராளமான கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்த. இதில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு இந்தியரும் பாரத் மண்டபத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைவார் என கூறினார். பாரத மண்டபம்' கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு தொழிலாளி சகோதர சகோதரிகளின் கடின உழைப்பைக் கண்டு, ஒட்டுமொத்த இந்தியாவும் வியந்து, வியந்து நிற்பதாக தெரிவித்தார். கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரனுக்கும் நன்றியுள்ள தேசத்தின் சார்பாக அஞ்சலி செலுத்தவதாக அவர் கூறினார். இந்த பாரத மண்டபம் நமது ஜனநாயகத்திற்கு இந்தியர்களாகிய நாம் அளித்த அழகிய பரிசு என அவர் பெருமிதம் தெரிவித்தார். எந்த நாடாக இருந்தாலும் சரி, எந்த சமூகமாக இருந்தாலும் சரி, துண்டு துண்டாக சிந்தித்து துண்டு துண்டாக வேலை செய்து முன்னேற முடியாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். உலகமே இந்தியாவை நோக்கிப் பார்க்கிறது என கூறிய அவர், முன்பு நினைத்துப் பார்க்க முடியாததை இந்தியா சாதித்துக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.