மணிப்பூர் வீடியோ விவகாரம்: சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை

செய்திகள் / இந்தியா

Published: Friday, July 28 2023, 11:36:43

மணிப்பூர் விடியோ விவகாரம் குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு பற்றிய வீடியோ விவகாரத்தை சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் மணிப்பூர் வீடியோ தொடர்பான வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்ய உள்ளது. அநேகமாக அண்டை மாநிலமான அசாமில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மைதேயி மற்றும் குகி ஆகிய இரு சமூக குழுக்களுடனும் மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்பில் இருப்பதாகவும், மணிப்பூரில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.