போரில் பங்கேற்க மக்கள் தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்

செய்திகள் / இந்தியா

Published: Wednesday, July 26 2023, 13:04:36

இனிமறைமுகமாக மட்டுமின்றி, நேரடியாகவும் போரில் பங்கேற்க மக்கள் தயாராக வேண்டும்.மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், நாட்டு மக்கள் அனைவரும் நேரடியாக போரில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும்.1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் இந்திய ராணுவ வீரர்கள் மேற்கொண்ட வீர தீர செயல்கள் வரலாற்றில் என்றும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். இன்று நம்மால் சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகிறது என்றால் அதற்கு காரணம் அவர்களின் தியாகம் தான் என்றார். இனிமேல் மறைமுகமாக மட்டுமின்றி, நேரடியாகவும் போரில் பங்கேற்க மக்கள் தயாராக வேண்டும். அதேபோல் அண்மை காலமாக போர்கள் நீடித்து வரும் நிலையில் ராணுவத்திற்கு மக்கள் உதவி செய்ய முன்வர வேண்டும் எனவும்,பாகிஸ்தானுடனான பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா முயற்சி செய்தது என்றார்,ஆபரேஷன் விஜய்"யின்போது இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதற்கும், நமது தேச நலன் என்று வரும்போது நமது ராணுவம் பின்வாங்காது. நமது தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் பாதுகாப்புத்துறை முழு கவனம் செலுத்தி வருகிறது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.