கார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு

செய்திகள் / இந்தியா

Published: Wednesday, July 26 2023, 11:15:07

இன்று கார்கில் போர் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீரின் கார்கில் பகுதியில் ஊடுருவி அப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் இந்திய ராணுவத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் மூண்டது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் நாடு முழுவதும் போர் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.