குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

செய்திகள் / இந்தியா

Published: Wednesday, July 26 2023, 10:45:21

குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத்தலைவராக திரவுபதி முர்மு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், குடியரசுத்தலைவர் பதவியேற்று ஓராண்டை நிறைவு செய்த திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். பொது சேவையில் அவரது அயராத அர்ப்பணிப்பும், முன்னேற்றத்திற்கான இடைவிடாத நாட்டமும் மிகவும் ஊக்கமளிக்கிறது என கூறியுள்ளார். அவரது பல்வேறு சாதனைகள் அவரது தலைமையின் உறுதியான தாக்கத்தை பிரதிபலிக்கின்றன என தெரிவித்துள்ளார்.