தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வரும் 26 அம் தேதி வெளியிடப்படும்

செய்திகள் / தமிழ்நாடு

Published: Tuesday, July 25 2023, 11:44:03

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வரும் 26 அம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என தெரிவித்துள்ளது.விடைத்தாள் நகல் பெற,மறுகூட்டலுக்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம எனவும் கூறியுள்ளது.