பெண்கள் கைதின் போது கவனம்: போலீசாருக்கு டிஜிபி அறிவுறுத்தல்

செய்திகள் / தமிழ்நாடு

Published: Tuesday, July 25 2023, 10:56:46

கைது செய்யப்படும் பெண்களை, விசாரணைக்காக காவல் நிலையம் மற்றும் அவர்களின் வீடுகளை தவிர மற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல கூடாது என டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார். காவல்துறை உயர் அதிகாரிகள் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சூரியன் உதிக்கும் முன் மறைவுக்கு பின் பெண்களை கைது செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். பெண்களை பெண் போலீஸ் அதிகாரிகள் மட்டுமே கைது செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். பெண்கள் சிறுமியரை கைது செய்ய நேர்ந்தால், விசாரணைக்காக காவல் நிலையம் மற்றும் அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லாம் என அவர் அறிவுறை கூறியிருக்கிறார். மற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். பெண் போலீசார் தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கைது செய்யப்படும் பெண்களை பெண் மருத்துவர்கள் மட்டுமே பரிசோதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். கர்ப்பிணியாக இருந்தால், கைது நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் எனவும் வயிற்றில் இருக்கும் கருவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். கைதுக்கான காரணங்களை பெண்களிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் எனவும் பெண்களை காவல் நிலையங்களில் நீண்ட நேரம் தங்க வைக்க கூடாது எனவும் தமிழக டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.