கால்பந்து வீரர் பீலே காலமானார்

செய்திகள் / விளையாட்டு

Published: Friday, December 30 2022, 12:04:28


கால்பந்து வீரர் பீலே உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

பிரேசில் நாட்டினை சேர்ந்த கால்பந்து வீரர் பீலே புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்  மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு பீலே கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல், இதய செயல் இழப்பு  ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பீலே உயிரிழந்தார். பீலே மறைவிற்கு உலகமெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.