டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று இன்று தொடக்கம்

செய்திகள் / விளையாட்டு

Published: Saturday, October 22 2022, 11:14:37


20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 12 சுற்றுகள் இன்று தொடங்குகின்றன. 

 20 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதற்கான தகுதிச் சுற்றுகள் நேற்றுடன் முடிவடைந்தன. இரண்டு முறை சாம்பியான மேற்கிந்திய தீவுகள் அணி தகுதிச் சுற்றிலேயே வெளியேறியது. இந்நிலையில் சூப்பர் 12 சுற்றுகள் இன்று தொடங்குகிறன. முதல் போட்டியில் குழு A இல் உள்ள நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.  பெர்த்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில் இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகள் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு பலபரிட்சை நடத்துகின்றன. சிட்னியில் நடக்கும் இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. நாளைய போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பலபரீட்சை நடத்தவுள்ளன.