7வது முறையாக ஆசிய கோப்பை வென்ற இந்திய மகளிர் அணி

செய்திகள் / விளையாட்டு

Published: Saturday, October 15 2022, 18:32:56


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி 7வது முறையாக இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பை வென்றது.  

வங்கதேசத்தில் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆசிய மகளிர் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர், 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 2 விக்கெட்டை இழந்து 8.3 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய மகளிர் அணி  கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் இதுவரை நடைபெற்ற மகளிருக்கான ஆசிய கோப்பை போட்டிகளில் 8ல் 7ஐ வென்று இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.