டைமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம்

செய்திகள் / விளையாட்டு

Published: Friday, September 09 2022, 09:22:52


டைமண்ட் லீக் தொடரின், ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். 


சுட்சர்லாந்து நாட்டில் டைமண்ட் லீக் தளகள போட்டி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா முதற்சுற்றில் 88.44 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். அதிக தூரத்திற்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். நீரஜ் சோப்ரா, டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன்  பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.