5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

செய்திகள் / விளையாட்டு

Published: Monday, September 05 2022, 13:20:27


ஆசிய டி20 கோப்பை தொடரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை டி20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய  இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி  19.5 ஓவரில் இலக்கை எட்டியது.