ஆசியக் கோப்பை கிரிக்கெட்: வங்காளதேச அணியை வீழ்த்தி சூப்பர்4 சுற்றுக்கு இலங்கை தகுதி

செய்திகள் / விளையாட்டு

Published: Friday, September 02 2022, 11:17:36


வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை திரில் வெற்றிபெற்றது. 


15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி பிரிவில் துபாயில்  நடைபெற்ற 5வது ஆட்டத்தில் இலங்கை- வங்காளதேச அணிகள் மோதின.டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய வங்காளதேச அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19.2 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை திரில் வெற்றிபெற்றது.