பஜனைக்கு தடையா? தமிழக பக்தர்கள் புகார்

செய்திகள் / ஆன்மீகம்

Published: Saturday, April 16 2022, 14:39:35

தமிழர்களின் தொன்மையான வழிபாட்டு முறைக்கு திருப்பதி மலையில் தடைவிதிக்க  தேவஸ்தான பாதுகாப்பு துறையினர் முயல்வதாக புகார் எழுந்துள்ளது.


திருப்பதி : செங்கல்பட்டில் இருந்து பஜனை செய்தபடி ஒரு குழுவினர்  பாதயாத்திரையாக திருப்பதிக்கு வந்து மலைக்கு செல்ல முயன்றனர். ஆர்மோனியம் ,தபேலா போன்ற வாத்தியக் கருவிகளை திருமலைக்கு  எடுத்து செல்லக்கூடாது என்று தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர்  தடை விதித்து தடுத்து நிறுத்தினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக பக்தர்கள் , சாலையில் அமர்ந்து பஜனை செய்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திர மாநில செய்தி தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி விரைந்து வந்து  பேச்சுவார்த்தை நடத்தி தமிழக பக்தர்கள் திருப்பதி மலைக்கு பஜனை செய்தபடி செல்ல அனுமதி வாங்கி கொடுத்தார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பக்தர்கள் வாத்தியங்களுடன் பாடுவதுதான் பஜனை என்றும் பெருமாளுக்கு பஜனை மிகவும் பிடிக்கும் என்றும் இதை தடுக்க முயல்வதாக குற்றம்சாட்டினர்.