உற்சவர் மலையப்ப சுவாமி ராமர் அலங்காரத்தில் வீதி உலா

செய்திகள் / ஆன்மீகம்

Published: Monday, April 11 2022, 09:27:59

ஏழுமலையான் கோவிலில் உற்சவர் மலையப்ப சுவாமி, ராமர் அலங்காரத்தில் வீதி உலா வந்தார் 


திருப்பதி: ஸ்ரீராம நவமியை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் சீதா தேவி, ராமர், லக்ஷ்மணர், ஆஞ்சநேயர் ஆகிய உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து திருப்பதி மலையில் உள்ள கோவில் மாடவீதிகளில் உற்சவர் மலையப்ப சுவாமி, ராமர் அலங்காரத்தில் ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளினார் . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.