அருங்கம் புல்லால் ஆன அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீராஜகணபதி

செய்திகள் / ஆன்மீகம்

Published: Monday, March 21 2022, 09:23:15

காரைக்காலில் பழமை வாய்ந்த ஸ்ரீராஜகணபதி ஆலயத்தில் சூரிய பூஜை விழா 2வது நாளான நேற்று வண்ண மலர்கள் மற்றும் அருங்கம் புல்லால் ஆன அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீராஜகணபதியை ஏராளமான பக்தர்கள் தரிசித்து அருள்பெற்றனர்.

 

புதுச்சேரி: காரைக்கால் கோவில்பத்து பகுதியில் ஸ்ரீராஜகணபதி ஆலயம் உள்ளது .இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஒரு வார காலம் மாலை நேரத்தில் சூரியன் ஒளி இறைவன் மீது நேரடியாக விழும் ஸ்ரீசூரிய பகவான் பூஜித்த அருள்மிகு ஸ்ரீபார்வதீஸ்வர சுவாமி தேவஸ்தானத்தின் அருகில் அமைந்துள்ள ஸ்ரீராஜகணபதி ஆலயத்தில் சூரியபகவான் ஸ்ரீராஜகணபதியை சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவதாக கருதப்படும்.

இந்நிலையில் சூரிய பூஜை விழா ஒரு வாரம் கொண்டாடப்படுவது வழக்கம். சூரிய பூஜை விழா 2வது நாளான நேற்று மாலை 6 மணியளவில் சூரியனின் ஒளி மூலவர் ஸ்ரீராஜகணபதி மீது விழுந்த போது விநாயகருக்கு விசேஷ பூஜைகள் மற்றும் தீபாராதனை மகாதீபாராதனை நடைபெற்றது.ஸ்ரீராஜ கணபதி மீது சூரிய ஒளி நேரடியாக விழும் காட்சியினை ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.