காற்றழுத்த தாழ்வு நிலை நாளை மாலை கரையைக் கடக்கும்

செய்திகள் / சற்றுமுன்

Published: Wednesday, November 10 2021, 13:28:10

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலூர் அருகே கரையை கடக்க கூடும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது

 


நேற்று  உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இன்று காலை 5.30 மணி அளவில்   குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்தது.  இது  தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில்  நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுவலடைந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகரக் கூடும். இது நாளை அதிகாலையில் வட தமிழக கடற்கரையை நெருங்க வாய்ப்புள்ளது.  இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, நாளை மாலைக்குள் கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.