குறைந்தது தக்காளி விலை

செய்திகள் / சற்றுமுன்

Published: Wednesday, November 10 2021, 09:36:50

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 10 ரூபாய் குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

 

தொடர் கனமழை காரணமாக கர்நாடக, ஆந்திர, தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு நாளொன்றுக்கு 70 முதல் 80 லோடு லாரிகள் வெளிமாநிலங்களில் இருந்து வரும் நிலையில், தற்போது 40 லோடு லாரிகள் மட்டும் வருவதால் தக்காளிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் விலை ஏற்றம் காரணமாக தக்காளி விற்பனை மந்தமாகவே இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 10 ரூபாய் குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.