நீட் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு

செய்திகள் / கல்வி

Published: Monday, May 02 2022, 12:54:17

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


டெல்லி: 2022-ம் ஆண்டு மருத்துவ பட்டப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு, நீட் ஜூலை 17ஆம் தேதி  நடைபெற உள்ளது. அதற்கான ஆன்லைன் பதிவு கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 6 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. www.neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.