கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பிக்கள் கோட்டா ரத்து: மத்திய அரசு

செய்திகள் / கல்வி

Published: Wednesday, April 27 2022, 08:57:33

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒவ்வொரு எம்.பி.யும் 10 மாணவர்களை சேர்க்கலாம் என்ற விருப்ப ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 


டெல்லி : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒவ்வொரு எம்.பி.யும் 10 மாணவர்களை சேர்க்கலாம் என்ற விருப்ப ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. எம்.பி.க்கள் ஒதுக்கீடு ரத்து மட்டுமின்றி, மத்திய கல்வி அமைச்சக ஊழியர்களின் 100 குழந்தைகள், எம்.பி.க்கள், ஓய்வுபெற்ற கேந்திரிய வித்யாலயா ஊழியர்கள் ஆகியோரின் குழந்தைகள் மற்றும் பேரப்பிள்ளைகள், பள்ளி நிர்வாக குழு தலைவரின் விருப்ப ஒதுக்கீடு ஆகிய ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதே சமயத்தில், பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா, வீர் சக்ரா, அசோக் சக்ரா, கீர்த்தி சக்ரா, ஷவுர்யா சக்ரா, தேசிய வீரதீர விருது ஆகியவற்றை பெற்றவர்களின் குழந்தைகள், ‘ரா’ ஊழியர்களின் 15 குழந்தைகள், நுண்கலையில் சிறப்பு திறன்வாய்ந்த குழந்தைகள் ஆகியோருக்கான ஒதுக்கீடு தொடரும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.  மேலும், கொரோனாவால் அனாதை ஆன குழந்தைகளை ‘பி.எம்.கேர்ஸ்’ திட்டத்தின்கீழ் சேர்த்துக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.