தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்

செய்திகள் / கல்வி

Published: Thursday, April 21 2022, 10:01:38

தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு  தொடங்கியது.


தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி சுமார் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு  தொடங்கியது. இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும்  சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார்.

அதில், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு  மே 18-ந்தேதி வரை நடைபெறும் என குறிப்பிட்டிருந்தது. மேலும், ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்ட விவரங்களை மே 29-ந்தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.