வரும் கல்வியாண்டும் முதல் இளநிலை பட்டப்படிப்பிற்கு நுழைவுத் தேர்வு!

செய்திகள் / கல்வி

Published: Tuesday, April 05 2022, 07:51:17

வரும் கல்வி ஆண்டு முதல் இளநிலை பட்டப் படிப்பிற்க்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு மத்தியக் கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் மாணவர்கள்,  பல்கலைக்கழகங்கள் மற்றும் ஒட்டுமொத்த கல்வி மீதான சுமையைக் குறைக்கும் விதமாக வரும் கல்வியாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக பொது நுழைவுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். 

சம அளவிலான பல்வேறு தேர்வு வாரியங்களில் பயின்ற மாணவர்களின் திறனை மதிப்பிடுவதற்காக, இளநிலை பட்டப்படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு  நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.  நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் 13 மொழிகளில் தேர்வு எழுதலாம் என தெரிவித்திருக்கிறார். 12ம் வகுப்பு பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே இளநிலைப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்தியக் கல்வித்துறை இணையமைச்சர் தெரிவித்திருக்கிறார். ’