டான்செட் நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

செய்திகள் / கல்வி

Published: Monday, March 28 2022, 08:49:58

டான்டான்செட் நுழைவுத் தேர்வுகளுக்கு வருகிற 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. 


சென்னை : எம்பிஏ, எம்சிஏ, எம்டெக் உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு டான்செட் நுழைவுத்தேர்வு மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதன்படி அடுத்த கல்வி ஆண்டுக்கான டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2022-23 கல்வியாண்டுக்கான எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.பிளான், எம்.ஆர்க், படிப்புகளில் சேர டான்செட் நுழைவுத் தேர்வுக்கு வருகிற 30ம் தேதி முதல் ஏப்ரல் 18ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.