நீட் நுழைவுத் தேர்வு எழுத வயது உச்சவரம்பு இல்லை

செய்திகள் / கல்வி

Published: Thursday, March 10 2022, 08:06:50

இளநிலை மருத்துவப் படிப்புகான நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 


நீட் தேர்வு எழுத பொது பிரிவினருக்கு 25வயது மற்ற இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 30 வயது என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு தேசிய மருத்துவ ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், எதிர்வரும் நீட் தேர்வுக்கான அறிவிப்பாணையை அதற்கேற்ற வகையில் வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மருத்துவம் படிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும், நாட்டில் மருத்துவ கல்வியை வலுப்படுத்த உதவும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்சுக் மாண்டவிய தெரிவித்திருக்கிறார்.