உக்ரைனில் 17-ம் நுற்றாண்டு கிறிஸ்தவ தேவாலயம் தாக்குதல்

செய்திகள் / உலகம்

Published: Monday, July 24 2023, 07:38:16

ரஷியா-உக்ரைன் இடையேயான போரில் 17 ஆம் நுற்றாண்டு கிறிஸ்தவ தேவாலயம் தாக்கப்பட்டுள்ளது. 


ரஷியா-உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் ரஷியா தாக்குதலில் உக்ரைனின் ஒடேசா துறைமுக நகரில் உள்ள ஒரு மிக பெரிய கிறிஸ்தவ தேவாலயம் தாக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் தேவாலயம் மிகப்பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளது. 1794-ல் கட்டப்பட்ட மிகப்பெரிய தேவாலயமான டிரான்ஸ்ஃபிகரேஷன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. கருங்கடல் ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகியதும் நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.