இந்திய தேசிய கீதத்தை பாடிய அமெரிக்க பாடகி

செய்திகள் / உலகம்

Published: Saturday, June 24 2023, 09:42:52

இந்திய தேசிய கீதத்தை பாடிய அமெரிக்க பாடகி மேர் மில்பென் பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.


3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி கடந்த 20ம் தேதி அன்று இந்தியாவிலிருந்து அமெரிக்க புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த சுற்றுப்பயணத்தின் கடைசி நிகழ்ச்சியாக வாஷிங்டனில் உள்ள ரொனால்ட் ரீகன் கட்டடத்தில், இந்திய வம்சாவளியினரை சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அதன் ஒருபகுதியாக அமெரிக்காவை சேர்ந்த பாடகி மேரி மில்பென், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்திய தேசிய கீதத்தை பாடி அசத்தினார். தொடர்ந்து பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. நிகழ்ச்சி தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட மெல்பின் தொடர்ந்து நான்கு அமெரிக்க அதிபர்களுக்காக அமெரிக்க தேசிய கீதம் மற்றும் தேசபக்தி பாடல்களை பாடிய நான், பிரதமர் மோடி வருகையின் போது  இந்திய தேசிய கீதத்தை பாடுவதை மிகவும் பெருமையாக கருதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.