சூடானில் ராணுவ மோதல்-உயிரிழப்பு எண்ணிக்கை 97 ஆக உயர்வு

செய்திகள் / உலகம்

Published: Monday, April 17 2023, 07:24:12


சூடானில் நடைபெறும் ராணுவ மோதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆர்.எஸ்.எப். துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பாக துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தாக்லோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது. ஆர்.எஸ்.எப். துணை ராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.கடந்த சில நாட்களாக நீடித்து வந்த இந்த மோதலில் துணை ராணுவ தளங்கள் மீது சூடான் ராணுவம் தற்போது வான்வழி தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதலில்  ஐ.நா. பணியாளர்கள் உள்பட 97 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இந்த மோதல்களுக்கு அமெரிக்கா, சீனா, ரஷியா, எகிப்து, சவுதி அரேபியா, ஐ.நா. அமைப்புகள், ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஆப்பிரிக்க கூட்டமைப்பு ஆகியவை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.மேலும், இந்தியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என  இந்திய தூதரகம் 2ம் முறையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.