ஆப்கானிஸ்தானுக்கு 10 ஆயிரம் டன் கோதுமை வழங்குகிறது இந்தியா

செய்திகள் / உலகம்

Published: Saturday, April 15 2023, 06:31:42


ஆப்கானிஸ்தானுக்கு 10 ஆயிரம் டன் கோதுமையை  இந்தியா வழங்குகிறது.

உணவு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உணவு உதவிக்காக 10,000 டன் கோதுமை வழங்க ஐநா உலக உணவுத் திட்டத்துடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.கடந்த ஆண்டு, இந்தியா 40,000 டன் கோதுமை வழங்கியதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் முழுவதும் 23 மில்லியன் உணவுப் பாதுகாப்பற்ற மக்களுக்கு ஐநா உலக உணவுத் திட்டத்தின் மூலம் உணவு ஏற்பாடு செய்தது. இந்த நிலையில் தற்போது 5-வது தவணையாக 10 ஆயிரம் டன் கோதுமை சபஹர் துறைமுகம் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலர் ஜேபி சிங் மற்றும் இந்தியாவின் உலக உணவுத் திட்டத்தின் இயக்குனர் எலிசபெத் ஃபாரே ஆகியோருக்கு இடையே கையெழுத்தானது.