இலங்கைக்கு பொருளாதார நெருக்கடியை கையாள இந்தியா ஆதரவளிக்கும்

செய்திகள் / உலகம்

Published: Saturday, April 15 2023, 05:13:25


பொருளாதார நெருக்கடியை கையாள இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என மத்திய  நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 


சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகால கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். இலங்கையின் கடன் பிரச்னைகள் குறித்த உயர்மட்ட கூட்டம் நேற்று நடந்தது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி, பிரான்ஸ் கருவூல பொது இயக்குனர் இம்மானுவேல் மவுலின் மற்றும் இலங்கையின் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கை அதிபரும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க காணொளி வாயிலாக இதில் கலந்து கொண்டார். இந்நிகழ்வின் நோக்கமானது இலங்கையுடன் இணைந்து கடன் வழங்குவதில் கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பான பலதரப்பு ஒத்துழைப்பை நிரூபிப்பதாகும். இந்நிகழ்வில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையைதொடங்குவதாக அமைச்சர்கள் அறிவித்தனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,‘‘தற்போதைய பொருளாதார நெருக்கடியை கையாள்வதில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும்’’ என அவர் கூறியுள்ளார்.