ஸ்மார்ட் போன் இல்லாதவர்களுக்கு புதிய டிஜிட்டல் பரிவர்த்தனை – ரிசர்வ் வங்கி

செய்திகள் / வர்த்தகம்

Published: Wednesday, March 09 2022, 08:08:39

ஸ்மார்ட்  போன் இல்லாதவர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய 123 பே என்ற புதிய சேவையை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.


புதிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தொடங்கி வைத்தார். இந்த சேவையை பயன்படுத்த விரும்புவோர் வங்கி கணக்குடன் செல்போன் எண்ணை இணைத்து டெபிட் கார்டு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர், 080 4516 3666 என்ற ஐ.வி.ஆர் எண்ணை அழைத்து பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மிஸ்டு கால் கொடுத்து பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பன்மடங்கு அதிகரிக்கும் என ரிசவ் வங்கி தெரிவித்துள்ளது.