கச்சா எண்ணெய் விலை உயர்வு

செய்திகள் / வர்த்தகம்

Published: Tuesday, March 08 2022, 09:41:28

உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது .


ரஷியாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதற்கு தடை விதிப்பது உள்ளிட்டபொருளாதார தடைகள் விதிக்க பரிசீலித்து வருவதாக அமெரிக்கா நேற்று அறிவித்தது.

அதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. பீப்பாய்க்கு 139.13 டாலர் என்ற நிலையை எட்டியது. பின்னர் சற்று தணிந்து 130.29 டாலர் ஆனது. இருப்பினும், ஒரே நாளில் 12 டாலர், அதாவது 10 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை 145 டாலரை எட்டியது குறிப்பிடத்தக்கது.