ஆகஸ்ட் – 4 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

செய்திகள் /

Published: Friday, July 28 2023, 12:53:24

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இன்று காலை மாநாட்டு விழாவின் மலர் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைகைச் செல்வன், தளவாய் சுந்தரம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இக்கூட்டத்தில், மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக மாநாடு குறித்தும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.