ஐபோன் 14 சீரிஸ் அறிமுகம்

செய்திகள் / தொழில் நுட்பம்

Published: Thursday, September 08 2022, 16:48:47

ஐபோன் 14 சீரிஸ் அறிமுகம் 


ஐபோன் மினி இல்லை இனிமே பிளஸ் தான் ! 



டெக் உலகில் மிகவும் எதிர்பார்த்து காணப்பட்ட ஐபோன் 14 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


அமெரிக்காவின் கியூபர்டினோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் புதிய சாதனங்களை அறிமுகம் செய்துவைத்தார். மேலும் செயற்கைகோள் கனெக்சன், விபத்து அறிவிப்பு வசதி போன்ற அம்சங்களோடு ஆப்பிள் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 


அது மட்டுமின்றி அதனோடு சேர்த்து ஆப்பிள் ஐவாட்ச் SE, ஆப்பிள் ஐவாட்ச் 8, ஆப்பிள் ஐவாட்ச் அல்ட்ரா மற்றும் 2வது ஜென் ஏர்பாட் உட்பட வெளியிட பட்டுள்ளது. 


முதலில் ஐபோன் 14 சீரிஸில் இடம்பெற்றுள்ள மொபைல்களின் அம்சங்கள் குறித்து காணலாம்.


ஆப்பிள் ஐபோன் 14:


ஆப்பிள் ஐபோன் 13இல் இடம்பெற்றுள்ள அதே A15 பயோனிக் சிப் கொண்டு வெளியாகியுள்ளது. ஆனால்  5 core gpu அப்கிரேட் செய்யப்பட்ட தொழிநுட்பத்தினால் முந்தைய மாடலை விட 18% வேகமாக திறனோடு வேலை செய்யும் என்று குறிப்பிட்டுள்ளனர்.


செப்டம்பர் 9 இலிருந்து ப்ரீபுக்கிங் செய்யலாம். செப்டம்பர் 16இலிருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும்.


ஆப்பிள் ஐபோன் 14 ப்ளஸ்:


ஆப்பிள் 14இல் உள்ள அதே வசதிகளோடு 6.7இன்ச் பெரிய டிஸ்பிளே வசதியோடு வெளியாகியுள்ளது ஆப்பிள் ஐபோன் 14 ப்ளஸ்


செப்டம்பர் 9 இலிருந்து ப்ரீபுக்கிங் செய்யலாம். அக்டோபர் 7இலிருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும்.


ஐபோன் 14 விலையானது ரூ.79,900 முதல் தொடங்குகிறது. அதேபோல் ஐபோன் 14 பிளஸ் ஆனது ரூ.89,900 முதல் தொடங்குகிறது.


ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ:




ஸ்மார்ட் போன் வரலாற்றில் ஒரு அதிவேகமான A16 பயோனிக் சிப் ப்ராசஸரோடு வெளியாகியுள்ள அதிநவீன ஐபோன் மாடல். அதன் இன்-டிஸ்பிளே டைனமிக் ஐலேண்ட் வசதி தனித்துவமான வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இது உயர்த்தப்பட்டுள்ள கேமரா மெகாபிக்ஸல் மற்றும் ஆப்பிள் ப்ரோ ரா போட்டோ வசதி ஆகியவையும் வரவவேற்ப்பை பெற்றுள்ளன. 30 நிமிடத்தில் 50% சார்ஜிங் வசதி, 1டிபி வரை சேமிப்பு வசதி போன்ற வசதிகள் இதில் அடங்கியுள்ளன.

 

செப்டம்பர் 9 இலிருந்து ப்ரீபுக்கிங் செய்யலாம். செப்டம்பர் 16இலிருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும்.


ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்:



ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோவில் உள்ள அதே வசதிகளுடன் 6.7இன்ச் பெரிய டிஸ்பிளேயில் வெளியாகியுள்ளது ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் இதிலும் 30 நிமிடத்தில் 50% சார்ஜிங் வசதி 1டிபி வரை சேமிப்பு வசதிகள்  உள்ளன.

 

செப்டம்பர் 9 இலிருந்து ப்ரீபுக்கிங் செய்யலாம். செப்டம்பர் 16இலிருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும்.


புதிய ஐபோன் 14 சீரீஸ் அறிமுகமான வேகத்தில் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி மாடல்கள் மீது அதிகாரப்பூர்வமாக விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடம் பழமையான ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி மாடல்களின் தற்போதைய விலையை பார்க்கலாமா! 


ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 13 மாடலை தற்போது ரூ.69,900 க்கு விற்பனை செய்கிறது. அதாவது அறிமுக விலையை விட ரூ.10,000 என்கிற குறைவான விலைக்கு பட்டியலிட்டுள்ளது.



iPhone 13 Mini-யின் புதிய விலைகள்: ஐபோன் 13 மினி 128 ஜிபி - ரூ 64,900 ஐபோன் 13 மினி 256 ஜிபி - ரூ 74,900 ஐபோன் 13 மினி 512 ஜிபி - ரூ 94,900


ஐபோன் 13 மாடலின் புதிய விலைகள்: ஐபோன் 13 128 ஜிபி - ரூ 69,900 ஐபோன் 13 256 ஜிபி - ரூ 79,900 ஐபோன் 13 512 ஜிபி - ரூ 99,900


ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 மாடலின் விலையையும் குறைத்துள்ளது. iPhone 12 ஆனது இப்போது ரூ.59,900 முதல் வாங்க கிடைக்கிறது. அதே நேரத்தில் iPhone 12 Mini நிறுத்தப்பட்டுள்ளது. 




 ஐபோன் 12 மினியின் விலை ரூ.64,900 ஆகும்.


iPhone 14 சீரீஸின் ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ்,  ஐபோன் 14 ப்ரோ, 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய  இந்த மாடல்கள் அனைத்துமே ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆப்பிளால் அங்கீகரிக்கப்பட்ட ரீசெல்லர்கள் வழியாக விற்பனை செய்யப்படும்.